Vettaiyan படம் பற்றி முழுமையான விமர்சனம்🍿

ரஜினியின் "வேட்டையன்" படம் எப்படி இருக்கு?

த ஞெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் என்று தான் சொல்லியே ஆக வேண்டும்.படம் இயக்குனரின் ஸ்டைலில் தான் திரைக்கதை செல்கிறது.ரஜினிக்கு என்று அறிமுக காட்சி மற்றும் ஒரு சில சண்டை காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது.இதுவே பாராட்ட கூடிய விசயம்தான் இயக்குனர் சொல்ல வரும் கதைக்குள் ரஜினி போன்ற பெரிய நட்சத்திரம் நடித்து கொடுத்திருப்பது.

படத்தில் ரஜினி மட்டும் இல்லாமல் மக்களால் விரும்பப்படும் இன்னும் பல நட்சத்திரங்களும் உள்ளனர்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக பொருந்தி உள்ளார்.பல காட்சிகளில் அவர் முத்திரை பதித்து இருக்கிறார்.இவர்களை தாண்டி திரையின் தன் இயல்பான நடிப்பை பலமாக கொண்டு பஹத் ஃபாசில் ஆடியன்ஸ் உடைய இதயங்களை இந்த படம் மூலமாக மீண்டும் வென்று உள்ளார்.மஞ்சு வாரியர் Manasilaayo பாடலிலும் இரண்டாம் பாதியில் ஒரு மாஸ் Action காட்சியில் மட்டுமே ஜொலிக்கிறார்.அவரின் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் . ரக்ஷன் கதாபாத்திரம் ஏமாற்றம்.ராணா Villain கதாபாத்திரம் என்று சொல்லி கொள்ளலாம்,பார்த்து பழகிய புளித்து போன வில்லனுக்கான Style-தான் ராணா Character.




படத்தில் பாராட்டியே ஆக வேண்டிய ஒரு விடயம் என்றால் இயக்குனர் திரை வழி சொல்ல முயற்சி செய்த அந்த கருத்து தான்.ஆனால் அதை திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.விறுவிறுப்பு சில இடங்களும் இருந்தாலும் இரண்டாம் பாதி சில காட்சிகள் போர் condition தான்.அந்த கால Cinema போல டிரைலரில் ஹிட் ஆன வசனத்தை ஹீரோ மீண்டும் மீண்டும் சொல்வது . ஆனால் அது சலிப்பை தான் ஏற்படுத்தி உள்ளது. வசனங்கள் பெரும்பாலும் தேவையான கருத்தை உரக்க சொல்லும் அளவுக்கு எழுதி இருக்கிறார்.

சண்டை காட்சிகள் மிகவும் சாதாரணமாகவே கையாளப்பட்டு இருக்கிறது.Camera Works கச்சிதம்.Location அனைத்தும் அழகு.குறிப்பாக Dushara Vijayan வேலை செய்யும் அந்த அரசு பள்ளி இடம்பெற்ற ஓர் அற்புதம்.அதை தன் கேமரா மூலம் கதிர் அவர்கள் நம்மை ரசிக்க வைத்தது இல்லாமல் அந்த ஊரை பார்க்க ஆசையும் ஏற்படுத்தியிருக்கிறார். அனிருத் இசை கூடுதல் Bonus. Hunter Vantaar Bgm இடம்பெறும் இடமெல்லாம் நம்மை அறியாமல் கைதட்டல் மற்றும் விசில் பறக்கிறது.Investigation,Gun shoot போன்ற சீன்களில் அனிருத் தன் பொறுப்பை திறம்பட அசத்தியுள்ளார்.

Emotion காட்சிகள் சில வொர்க் ஆகியுள்ளது.Dushara Role தான் படத்தின் கதை நகர்வு.அவரும் சிறப்பான நடிப்பு.

மொத்தத்தில் வேட்டையன் அதிகம் Information கொடுக்கும்.Message கொடுக்கும்.ஆனால் கொடுத்த காசுக்கு முழுமையான திருப்தியை கொடுக்குமா என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

Kollywood_24x7 Verdict ---> Decent Watch

Comments