Manjummel Boys Movie Review

Kollywood_24x7 Manjummel Boys Movie Review

ரீசண்டா மலையாளத்துல ரிலீசான மஜ்மல் பாய்ஸ் படத்தோட ரிவ்யூ தான் இது.

ஒரு ஜாலியா ஆரம்பிக்கிற கதை களத்தில் அதுக்கப்புறம் கொஞ்சம் கூட நம்மள கதைய விட்டு நகர முடியாத அளவுக்கு விறுவிறுப்பான திகைக்கதை. நம்ம கூட ஈஸியா கனெக்ட் ஆகுற அளவுக்கு எமோஷன் சீன்ஸ், அந்த எமோஷன் சீன்ஸ்க்கு வலு சேர்க்கக்கூடிய அளவுக்கு பின்னனி இசை, அப்படியே அந்தப் பாரைகல நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டின ஒளிப்பதிவு, ஒருவேளை இதெல்லாம் உண்மையிலேயே பாரையில தான் எடுத்து இருப்பாங்களோ அப்படின்னு நம்மள நம்ப வைக்க கூடிய அளவான செட் ஒர்க்ஸ் அப்படின்னு படம் முழுக்க எல்லா டிபார்ட்மெண்ட்டும் தங்களுடைய வேலையை மிகச் சிறப்பா செஞ்சதுனால தான் இந்த படம் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு படமா அமைஞ்சுருக்கு. இது ஒரு சர்வைவல் திரில்லர் அப்படின்னு சொல்லலாம் ஒரு பிரண்ட்ஷிப்பை ரொம்பவே அழகா காட்டுற படம்னு கூட சொல்லலாம்.


படத்தோட கதை என்னன்னா கொச்சில இருக்குற பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டூர் போகலாமாம் அப்படின்னு பிளான் பண்ணி கொடைக்கானல் வராங்க. அங்க வந்தவங்க குணா பாறையை போய் வேடிக்கை பார்க்க அங்க ஒரு சம்பவம் நடந்து அதிலிருந்து நடக்கிறது தான் இந்த படத்தோட மிச்ச கதை.

படத்துல நடிச்ச எல்லா நடிகர்களும் ரொம்பவே அட்டகாசமா நடிச்சிருக்காங்க. இது மலையாள படமா இருந்தாலும் படத்தோட 90% கதைக்களம் கொடைக்கானலில் நடக்கிறதுனால தமிழ்ல தான் போகுது. அதனால இன்னும் ஈசியாவே நம்ம தமிழ் ஆடியன்ஸ்க்கு கனெக்ட் ஆகுது. படத்துல அங்கங்க வந்திருக்க நம்ம தமிழ் நடிகர்களும் சிறப்பாக செய்து இருக்காங்க. மரியம் ஜார்ஜ் அவரோட கதாபாத்திரத்தை மலையாள சினிமாலயும் நிலை நிறுத்தி இருக்காங்க. மொத்தமா இந்த படத்தை பத்தி சொல்லனும்னா குடும்பத்தோட நண்பர்களோட தியேட்டர்ல போய் பார்க்கக்கூடிய வொர்த் ஆன படம்.


Comments