Master OTT Or Thetre Release???
நடிகர் விஜய்,விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ்,சாந்தனு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைத்து நடித்த மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் தான் மாஸ்டர்.
இந்த படம் கொரோனா இல்லாமல் இருந்து இருந்தால் ஏப்ரல் 09 அன்றே வெளியாகி இருக்க வேண்டிய படம்.
கொரோனோ நோயின் காரணத்தால் தற்போது வரை வெளியாகவில்லை.இந்த படம் ஆரம்பம் முதல்லே பல எதிர்பார்ப்புகளை கொன்டுள்ளது.
தற்போது இந்த படம் OTT யிள் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பது உண்மை தான். இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
இவ்வளவு நாள் ரிலீஸ் செய்தால் திரையரங்கில் மட்டும் தான் வெளியிடுவோம் என்று அடம்பிடித்த பட குழுவினர் திடீர் என OTT இடம் பேச காரணம் என்ன?
பல காரணங்கள் உண்டு.படம் சுமார் 8 மாதம் மேலாக முடித்து வைக்கப்பட்டு தேவையில்லாமல் வட்டி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு என்னதான் திரையரங்கு திறக்க அனுமதி அளித்தாலும் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி.
இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் தியேட்டர் திறக்கப்படவில்லை.
பல நாடுகளில் கொரோனா வின் இரண்டாம் அலை தாக்கம் துவங்கிவிட்டது. ஆகவே வெளிநாட்டில் வெளியிடவும் சிக்கல்.தளபதி விஜய் அவர்களுக்கு வெளிநாட்டில் தனி வர்த்தகம் உண்டு என்பது நமக்கு தெரிந்ததே.
இன்னொரு முக்கிய காரணம் சம்பத்தில் வெளியான இரண்டு முக்கிய படங்கள் OTTயில் வெளியானாலும் மிகப்பெரிய வரவேற்பு என்பது மக்களிடம் பெற்றது.
இப்போது உள்ள சுழலில் தியேட்டரில் ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். விஜய்க்கு குடும்பம் மற்றும் குழந்தை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இதை எல்லாம் சிந்தித்து பார்த்தே படக்குழு ஒரு நல்ல பாதுகாப்பான முடிவை எடுக்க ேண்டும்.
படம் அப்படி தியேட்டர் தான் என்று பார்த்தால் ஏப்ரல் மட்டுமே சாத்தியம்.
OTT என்றால் பொங்கலுக்கு வாய்ப்பு.
எங்கு ரிலீஸ் என்று படக்குழு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
Comments
Post a Comment